முதன்முறையாக போலீஸாக நடிக்கும் அருள்நிதி! – தேஜாவு டீசர் ரிலீஸ்!

வியாழன், 27 ஜனவரி 2022 (11:47 IST)
அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தேஜாவு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து தற்போது தேஜாவு பட டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அருள்நிதியுடன் ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத் குமார், ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டீசரை காண.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்