கொரோனா இரண்டு அலைகளால் நொடித்து போன இந்திய சினிமா கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஒமிக்ரான் தொற்று அலை இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்த நிலையில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஜனவரி மாதத்தில் ரிலீஸ் ஆக இருந்த மிகப்பெரிய பேன் இந்தியா படங்கள் ரிலிஸை தள்ளிவைத்துள்ளன.
இதில் ஆர் ஆர் ஆர், வலிமை, ராதே ஷ்யாம், எதற்கும் துணிந்தவன், பீம்லா நாயுடு உள்ளிட்ட தென்னிந்திய படங்களும் அடக்கம். இதனால் இந்திய திரையரங்குகளுக்கும் திரையுலகுக்கும் 1500 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு வட்டித் தொகையே பல கோடி ரூபாய் அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.