மகாநடி படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் கல்கி 2898 ஏடி. மகாபாரத குருச்சேத்திர போரையும், அதற்கு பிறகு 6 ஆயிரம் ஆண்டுகள் கழித்து நடக்கும் கல்கியின் வருகையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் ஹிட் அடித்து 1100 கோடி வசூலித்தது.
பெண் கதாபாத்திரத்தை மையமாக அவித்து அந்த படத்தை அவர் உருவாக்கவுள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.