ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு செல்லும்போது தீபிகா ஹிஜாப் அணிந்திருந்தது, பெண்களின் சுதந்திரம் குறித்து பேசிய அவரது முந்தைய நிலைப்பாடுகளுக்கு முரணாக இருப்பதாக நெட்டிசன்கள் சாடுகின்றனர். பல பயனர்கள் இது 'போலி ஃபெமினிசம்' என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி பிரபலமாகி வரும் 'My Choice' விளம்பரத்தை குறிப்பிட்டு, "பொட்டு வைக்கலாமா வேண்டாமா என்பது என் தேர்வு என்று பேசியவர், இப்போது பணத்துக்காக முக்காடு அணிந்துள்ளார்" என்று விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சிலர் "பணத்துக்காக ஹிஜாப்" என்றும், "கோயிலில் உடை அணிவதில் சிரமம் காண்பவர்கள், இங்கு சௌகரியம் பார்க்கிறார்கள்" என்றும் கருத்து தெரிவித்தனர்.