நயனை விரட்டி விரட்டி ரொமான்ஸ் செய்யும் ரஜினி - #தரம்மாறாசிங்கிள்நானடி வீடியோ பாடல்!

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (12:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது.   
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் சூப்பர்ஸ்டார் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். படம் வெளியாகி வெறும் ஒன்பது நாளில் 150 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் பாடலான "தரம் மாறா சிங்கிள் நானடி" என்ற பாடல்  வீடியோ சற்றுமுன் யூடியூபில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி பாடியுள்ள  இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இதற்கு முன் வெளிவந்த " சும்மா கிழி " பாடல் தற்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்