கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
அதையடுத்து அவர் நடிப்பில் உருவான திரைப்படம் டாடா. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார்.
இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இப்படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் எனப் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
explore the complexities of family, love and choices with this heartfelt story