மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம் , தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படமான சீதாராமம் மற்றும் இந்தி படமான சுப் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் ஹிட் படம் கொடுத்துள்ள அவர் அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.