புத்தாண்டு தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் மூன்று இயக்குனர்கள்!

புதன், 30 டிசம்பர் 2020 (18:58 IST)
புத்தாண்டு தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் மூன்று இயக்குனர்கள்!
தமிழ் சினிமாவின் வெற்றி பட இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித் மற்றும் ராட்சசன் ராம்குமார் ஆகியோர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மூன்று வெற்றிப்பட இயக்குனர்களும் இணைந்து வரும் புத்தாண்டு தினத்தில் அதாவது ஜனவரி 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளனர் 
 
பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தான் கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் மற்றும் ராம்குமார் ஆகியோர் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படம் சிவி குமார் அவர்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 21 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின், கலையரசன், கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ன என்பதை புத்தாண்டு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்