இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது, 4 பேருக்கு கொரோனா தொற்றால் ரஜினி ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையின் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையிலுள்ள போயஸ்கார்டன் இல்லம் திரும்பவே அவரது மனைவிலதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
இநிலையில் இன்று ஒரு அவசர அறிக்கை வெளியிட்டார். அதில், நான் கட்சி தொடங்கப்போவதில்லை; இதற்காக என்னை மக்கள் மன்னிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொருத்தியுள்ளதால், அரசியல் கட்சி தொடங்கினால் ரத்த அழுத்தம் ஏற்பவாய்ப்புண்டு என்று என்னை நம்பி வருபவர்கலை பலிகடா ஆக்கவிரும்பவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், தலைவா..பிளீஸ் டோண்ட் பீல்…உங்களைப் போல தலைவரைப் பெற எங்களுக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்…நீங்கள் எங்களுக்கு முக்கியம்…உங்களை எப்போது, விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.