கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னாருன்னு இப்பதான் புரியுது.. ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த சேவாக்!

திங்கள், 26 ஜூன் 2023 (07:29 IST)
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் இந்த படம் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள சேவாக் அதை ட்ரோல் செய்துள்ளார். படம் பார்த்த அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “ஆதிபுருஷ் படம் பார்த்த பின்னர்தான் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனத் தெரிகிறது” எனக் கூறியுள்ளார். சேவாக்கின் இந்த நக்கல் ட்வீட் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் ஆதிபுருஷ் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 6 நாட்களில் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்