நாயகன் மீண்டும் வறார்..! வெளியானது Project K சர்ப்ரைஸ் வீடியோ!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (12:20 IST)
கமல்ஹாசன் நடிக்கும் பேன் இந்தியா படமான ‘Project K’ குறித்த அதிகாரப்பூர்வ சர்பரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.



பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து புதிதாக படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்போதைக்கு ‘Project K’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான லீட் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிக்கின்றனர். இதுதவிர இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தி நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை ஜதி ரத்னலு, மகாநதி படங்களை இயக்கிய நாக் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு வீடியோ வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்