பிக்பாஸ் தர்ஷன் மேல் சனம் கொடுத்த புகார் என்ன ஆனது ? காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:40 IST)
பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆன தர்ஷன் மீது அவரது முன்னாள் காதலி ஷனம் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணை என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.  சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி தர்ஷன்  தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகு பதிலளித்த தர்ஷன், காதல் என்ற பெயரில் என்னை அவள் இருக்க சொல்லி சொல்லி டார்ச்சர் செய்தாள், எங்கேயும் தனியாக செல்ல கூடாது...மற்ற பெண் போட்டியாளர்களுடன் பேசக்கூடாது என என்னிடம் கூறிவிட்டு அவள் அவளுடைய எக்ஸ் பாய்பிரண்டுடன் நைட் பார்ட்டியில் தங்கியிருந்தால் என தர்ஷன் கூறினார். இது சம்மந்தமாக சனம் அளித்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் அதன் பேரில் போலீஸார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்தார் சனம்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், சனம் பிரசாத்தின் வழக்கு குறித்து மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் வழக்கு இப்போது சூடு பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்