கொரொனா உறுதி...ரசிகர்களை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்

Webdunia
புதன், 12 மே 2021 (21:38 IST)
பட நடிகர் மாறன் கொரொனாவால் உயிரிழந்த நிலையில் இன்று மற்றொரு நடிகர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் , கவனக்குறைவாக இருந்ததால் தனக்கு கொரொனா வந்துள்ளதாக நடிகர் சென்ராயன் தெரிவித்துள்ளார்.

மூடர் கூட்டம் என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்ராயன். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்துகொண்டதன்  மூலம் தமிழகமெங்கும் பிரபலம ஆனார்.

இந்நிலையில் நடிகர் சென்ராயனுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில்,நான நடிக்கவில்லை; உண்மையாகவே ஆவி பிடிக்கிறேன். வாழ்க்கையிலும் சினிமாவிலும் ஜெயிக்க வேண்டுமென எப்போதும் பாசிடிவ்வாக இருக்கும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது. முதலில் கவனக்குறைவாக இருந்த எனக்கு இத்தொற்று வந்துவிட்டதால் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்… எனவே நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருங்கள்…கொரொனா டேஞ்சரஸ் என ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்