பிரபாஸுடன் நடிக்கிறேனா? விஜய் பட நடிகரின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 12 மே 2021 (20:06 IST)
பிரபாஸ் படத்தில் நடிப்பது பற்றி என்னால் இப்போது கூற முடியாது என நடிகர் விஜய்பட நடிகர் தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்திற்குப் பின் உலகளவில் பிரபாஸின் மார்கெட் உயர்ந்துள்ளது. அவர் இந்தியாவில் அதிகளவில்(ரூ.100 கோடி) சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராவார்.

பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாயிப் அலிகான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ்.

இப்படம் ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது.

3 டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷர்மா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 
இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அனைத்து மீடியாக்களிலும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுதீப், ஆதிபுரூஸ் படக்குழுவினர் எனது மேனேஜரை சந்தித்து இப்படம் குறித்து பேசினர். ஆனால் அவர்கள் என்னிடம் இதைப்பற்றி பேசவில்லை. எனவே இப்படத்தில் நடிக்கிறேனா இல்லையா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.இதைக்கேட்டு பிரபாஸ் மற்றும் சுதீப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒருவேளை சுதீப் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கான கால்ஷீட் பிரச்சனையால் கூட அவர் இப்படி பதில் கூறியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விஜய்யின் புலி படத்திலும், நான் ஈ படத்திலும் நானிக்கு வில்லனாகவுப் சுதீப் நடித்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்