கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Mahendran

சனி, 9 ஆகஸ்ட் 2025 (14:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, பெங்களூரில் முதல் நாள், முதல் காட்சி டிக்கெட் ரூ.2,000 வரை விற்பனையாவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று கேரளாவில் முன்பதிவு தொடங்கிய ஒரே மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா: கேரளாவுக்கு அடுத்தபடியாக இன்று இந்த மாநிலங்களிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
 
பெங்களூருவில் உள்ள தனி திரையரங்குகளில் 'கூலி' படத்தின் முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகிறது. இந்த அதிகபட்ச விலை நிர்ணயம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விலை ரூ.190 முதல் ரூ.250 வரை மட்டுமே உள்ளது. இது பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.
 
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்க இருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களில் காலை 6:30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்