இந்த படம் வெளியாக மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 51 கோடி ரூபாய் வசூலித்துக் கலக்கி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க யோகிபாபு, சரவணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.