இவர்கள்தான் எனது தூண்கள்.. எனது வெற்றிகளில் பங்கு – லோகேஷ் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வ பதிவு!

vinoth

சனி, 9 ஆகஸ்ட் 2025 (09:49 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’இன்னும் ஐந்து நாட்களில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது. படம் சம்மந்தமாக பல தகவல்களை தன்னுடைய நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ்.

இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தன்னுடைய படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் குறித்து சிலாகித்து பதிவிட்டுள்ளார். அதில் “என்னுடைய தூண்களாக ஆரம்பம் முதல் இருப்பவர்களைப் பற்றி பேச இதுதான் சரியான தருணம்.

ஆரம்பம் முதலே அவர்கள் நான் இப்போதிருக்கும் உயரத்தில் பார்க்க ஆசைப்பட்டார்கள். என்னுடைய வெற்றிகளில் அவர்களுக்கு பெரிய பங்குண்டு.  அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது அவர்கள் இயக்குனர்களாக உயர்ந்துள்ளதைக் காண ஆவலாக உள்ளேன். எப்போதும் உங்களுக்கு என் அன்பு மாஸ்டர்ஸ்- அண்ணன்கள்” என பதிவிட்டு அவர்களோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்