அப்படி விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன். 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
அப்போது பேசிய அவர் “வேறு எந்த படமாக இருந்தாலும் நான் வந்திருக்க மாட்டேன். ஆனால் கேப்டன் பிரபாகரன் படத்தின் நிகழ்ச்சிக்கு இந்த பிரபாகரன் கண்டிப்பாக வருவேன். ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே என்னை எல்லோரும் பிரபாகரன் பிரபாகரன் எனக் கூப்பிடும்போது இந்த படம்தான் ஞாபகம் வரும். அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது, இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் என சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
நான் தோல்விகளை நினைத்து அழவில்லை. என் அப்பாவை நான் மிஸ் பண்றேன், அதனால் நான் அழுகிறேன். எனக்கு எம் பி பதவியெல்லாம் பெரிதில்லை. கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் என்பதே கடைசி வரை போதும்” என பேசும்போதே கட்டுப்பாட்டை இழந்து அழத் தொடங்கிவிட்டார். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த படக்குழுவினர் அவரை ஆறுதல் படுத்தினர்.