கெட்ட வார்த்தையில் அதிருப்தியை வெளியிட்ட அஸ்வின் குமார்!

திங்கள், 31 ஜனவரி 2022 (16:10 IST)
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் சமீபத்தில் ஒரு ஆடியோ விழாவில் பேசியது அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களை வைத்தது.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

வழக்கமாக இதுபோல ட்ரோல்கள் ஒரு வாரத்தில் மறைந்துவிடும். ஆனால் அஸ்வின் எதைத் தொட்டாலும் இப்போது ட்ரோலாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதனால் கடுப்பான அஸ்வின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில் சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்திருந்ததால் இப்போது அதுவும் சர்ச்சையாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்