இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில், சற்றுமுன் நடைபெற்ற டாஸில் இங்கிலாந்து அணி வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இன்னும் சில நிமிடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கம்போஜ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றம், இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசையில் புதிய உத்திகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெதெல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.