தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இன்று தனது 49-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் மட்டுமே இன்று உயரத்தை எட்டியுள்ளார்.
ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் இதுவாகும். தாங்கள் உயிராக நேசிக்கும் அஜித்தின் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தல அஜித்தின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதன்படி இயக்குனரும் அஜித்தின் நண்பருமான வெங்கட் பிரபு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், கஸ்தூரி சங்கர், ப்ரேம்ஜி, சிவகார்த்திகேயன், வைபவ் போன்ற திரை பிரபலங்களும் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அஜித்க்கு சினிமா பிரபலங்களை தாண்டி மற்ற துறைகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திய ராணுவத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் கேக் வெட்டி இந்த பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.