துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஆக வாழ்த்துகள்- ஹெச்.வினோத்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (22:32 IST)
தமிழ் சினிமாவில் விஜய்- அஜித் ஆகிய இரு முன்னணி நடிகர்களின் படங்கள்  நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களான துணிவு- வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை ஒட்டி  ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த  நிலையில், வாரிசு படம் ஊடகவியலாளர்களுக்கு ஸ்பெஷல் காட்சிகள் போட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்த்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்து இப்படத்தில் நடித்த விஜய்யின் கிளைமாக்ஸ் காட்சிகள் பற்றி பாராட்டி வருகின்றனர்.
 

ALSO READ: துணிவு vs வாரிசு ஒரே நாளில் ரிலீஸ்… டிவிட்டரில் வெங்கட்பிரபு செய்த மாற்றம்!
 
இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத்  தன் டுவிட்டர் பக்கத்தில்,துணிவு மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் இரண்டும் வெற்றியடைய வேண்டும் என்று விஜய்- அஜித் இருவரின் புகைப்படங்கள் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்