பள்ளியில் சாதிச் சண்டை நடக்க சினிமா தான் காரணம் - பிரபல நடிகர்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:05 IST)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும்,14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்  வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில்  இருந்தபோது இரவு  10 :30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று  வீட்டிற்குள் அத்துமீறி  நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு, அரசியல் தலைவர்கள்,  சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி நடிகர் டெல்லி கணேஷ் கூறியதாவது: ‘’மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். பள்ளியில் சாதிச் சண்டை நடக்கிறது என்றால் இதற்குக் காரணம் சினிமாதான். சினிமா சமூகத்திற்கு  நல்லது கூற வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால் வேறு எதையோ மக்களுக்கு காட்டுகிறார்கள்… ஒரு கோஷ்டி தாக்கிப் படம் எடுப்பதைப் பார்த்துவிட்டு, மற்றொரு கோஷ்டி, வேறு மாதிரி தாக்கிப் படம் எடுக்கிறார்ககள்… இப்படி படம் எடுக்கக் கூடாது… நல்ல கதைகள் இருப்பதால் அவற்றை சினிமாவாக எடுக்கலாம் ''என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்