ஏளிய மக்களுக்கு குரல் தருபவர்கள் மிகவும் அரிது ...பிரபல நடிகரை பாராட்டிய புளூ சட்டை மாறன்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும்,14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாங்குநேரியில் வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில்  இருந்தபோது இரவுல் 10 :30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று  வீட்டிற்குள் அத்துமீறி  நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், இதுபற்றி நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்  டுவிட்டர் பக்கத்தில், ‘’தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.   சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்ப்பட ஹீரோக்களில் எளிய மக்களுக்கு குரல் தருபவர்கள் மிகவும் அரிது அல்லது இல்லவே இல்லை.

தனது புகழையும், ரசிகர்களையும் சமூக மேம்பாட்டிற்கு பயன்படும் வண்ணம் முன்னெடுப்பவரே அசல் பிரபலம். அதில் ஒருவர்தான் ஜீ.வி. பிரகாஷ்.

இதே நிலைப்பாட்டை எந்த சமரசத்திற்கும் ஆட்படாமல்.. தன் காலமுள்ளவரை எடுக்க வேண்டும்.

மற்றதெல்லாம் படத்தில் மட்டும் ஏழைகளுக்காக பஞ்ச் பேசி, நிஜத்தில் அட்டகத்திகளாக இருப்பவைகள். வேஸ்ட்.’’ என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்