சின்மயி மனு நிராகரிப்பு... டப்பிங் யூனியன் தலைவரானாக ராதாரவி தேர்வு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (16:07 IST)
ராதாரவி டப்பிங் கலைஞர் தலைவராக தேர்வு

பிரபல திரைப்பட பின்னணி  பாடகி சின்மயி டப்பிங் கலைஞராக உள்ளார். டப்பிங் யூனியனில் வரும் 15 ஆம் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது.
 
மீடூ விவகாரத்தில் நடிகர் ராதாரவி மற்றும் சின்மயிக்குக்கும் மோதல் வெடித்தது. பின்னர் சங்கத்தில் உறுப்பினருக்கான பணம் கட்டவில்லை எனக் கூறி அவரை நீக்கினார். அதனையடுத்து, நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் டப்பிங் கலைஞர் சங்கத்தில் சேர்ந்தார் சின்மயி.
 
இந்நிலையில் வரும் டப்பிங் கலைஞர் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி களமிறங்கினார். அவருக்கு ஆதரவாக நடிகர் நாசரும் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் சின்மயி மனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலையில் இன்று அவரது மனி நிராகரிகப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் சங்க முறைப்படி சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசயமயம் சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்த நடிகர் ராதாரவி டப்பிங் கலைஞர் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்