நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்: ஒய்ஜி மகேந்திரனை சாடிய சின்மயி!

திங்கள், 23 டிசம்பர் 2019 (18:51 IST)
நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரபல பாடகி சின்மயி.
 
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் ஒரு கருத்து தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலை நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரன் அதன் பின்னர் பேசிய போது ’இன்றைய இளைஞர்கள் பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் அரசியலுக்கு ரஜினி அரசியலுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் அரசியல்வாதிகள் மாணவர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரபல பாடகி சின்மயி. அவர் கூறியுள்ளதாவது,  இந்த மனிதர் சொல்லும் கருத்தை எல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான் என்று சாடியிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்