சேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு! – சேரன் ட்வீட்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (14:06 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் தனக்கென தனி மரியாதை பெற்ற சேரன் சமீபத்தில் அபிராமி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லாஸ்லியா இயக்குனர் சேரனை “சேரப்பா” என அழைத்து வந்தார். சேரனும் லாஸ்லியாவிடம் மகள் மீது செலுத்தும் அன்பை செலுத்தினார். ஆனால் கவின் உடனான பழக்கத்திற்கு பிறகு சேரனை ஒதுக்கியே வந்தார் லாஸ்லியா. இதனால் பலர் சேரனுக்கு ஆதரவாகவும், லாஸ்லியாவுக்கு எதிராகவும் கூட பதிவுகளை இட்டு வந்தனர்.

அதேசமயம் சேரனை “அண்ணா” என்று அழைத்து பாசத்துடன் பழகியவர் நடிகை அபிராமி. தற்போது பிக்பாஸ் முடிந்து அனைத்து பிரபலங்களும் அவரவர் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டார்கள். அதற்கு பிறகு லாஸ்லியா குறித்து சேரன் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் நடிகை அபிராமி சேரனை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ”எனது அண்ணனுடன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதை தனது ட்விட்டரில் பகிர்ந்த சேரன் “அன்புத்தங்கைதான்.. வெளியில் வந்தபின்பும் அதே அன்போடு நடந்துகொள்ளும் தங்கை.” என்று கூறியுள்ளார். சேரன் லாஸ்லியாவை குறிப்பிட்டுதான் இதை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளியே வந்த பிறகும் குணம் மாறாமல் பழகும் அபிராமியை சேரன் புகழ்ந்துள்ளது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்