சிம்பு - வெற்றிமாறன் கூட்டணிக்கு கண்டிஷன் போட்டாரா தனுஷ்? - வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ!

Prasanth K

திங்கள், 30 ஜூன் 2025 (10:49 IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு வந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இயக்குனர் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வரும் நிலையில் சமீபத்தில் அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த படம் வெற்றிமாறன் முன்னர் இயக்கிய வடசென்னை படத்தின் டைம்லைனில் நடப்பதாகவும், அந்த படத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், முக்கிய கதாப்பாத்திரங்கள் இதில் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியானது.

 

அதை தொடர்ந்து வடசென்னை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், தனது அனுமதி இன்றி அந்த படத்தின் கதைகளத்தை பயன்படுத்துவதற்காக ரூ20 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக வெற்றிமாறன் - தனுஷ் இடையே நல்ல நட்பு உள்ள நிலையில், இந்த செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில்தான் இந்த சர்ச்சைகள் குறித்து விளக்க வீடியோ ஒன்றை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்த படத்தை வடசென்னை கதை பின்னணியிலும் இயக்கலாம் அல்லது தனிக் கதையாகவும் எடுக்க முடியும். எது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என தனுஷிடம் கூறியதாகவும், 

 

அதற்கு தனுஷ் “உங்களுக்கு எது சரியென்று இருக்கிறதோ அதை செய்யுங்கள். அதற்காக நீங்கள் எனக்கு பணம் எதுவும் தர வேண்டாம்” என கூறியதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

 

மேலும் தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் மோதல் என்ற வகையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்