''குக் வித் கோமாளி - சீசன் 5''- செஃப் வெங்கடேஷுக்கு பதிலாக யார்?

Sinoj

சனி, 24 பிப்ரவரி 2024 (14:22 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி தொடரின் 5வது சீசனில் தான் பங்கேற்கவில்லை என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
 
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான  ஒளிபரப்பாகி வரும் தோர் குக் விக் கோமாளி. இத்தொடரின் 4 சீசன்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில்,சீசன் 5-ல் நடுவராக  செஃப் வெங்கடேஷ் பட்  தொடர்வார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவலாகி வந்தது.
 
இதுகுறித்து செஃப் வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ''விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி தொடரின் 5 வது சிசனில்  நான் பங்கேற்கவில்லை. மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்த முடிவு கடினமாக இருந்தாலும், அதில் நான்  உறுதியாக இருக்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கடந்த 2019 அம ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமுவும், செப் வெங்கடேசும் இருந்தனர். தற்போது செஃப் வெங்கடேஷின் முடிவால் ரசிகர்கல் அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்து  நடுவராக பங்கேற்கப் போகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்