’’சந்திரயான் -3 ’’: வெற்றி நிச்சயம் வெண்ணிலா சத்தியம்’’ -கவிஞர் வைரமுத்து

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (21:34 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், நேற்று, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ‘’சந்திரயான் 3’’ விண்கலம். இதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு விண்கலம் அனுப்பி, தென் துருவத்தில் தரையிறங்கி  ஆராய்ச்சி மேற்கொள்ள 
  ரூ.978 கோடி மதிப்பில் சந்திரயான்-3   உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு  முன்னதாக சந்திரயான் 1 மற்றும் 2 விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டன. இதில் சந்திரயான் 2 நிலவில் இறங்க இருந்த சில வினாடிகளுக்கு முன்பாக தொடர்பை இழந்தது. இந்நிலையில்  நேற்று  நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால்   நேற்று விண்ணில் ஏவப்பட்ட ''சந்திரயான் 3'' என்ற இந்த விண்கலம்   பூமியில் இருந்து 3.84 லட்சம் கிமீ தொலைவில் உள்ள  நிலவை சென்றடைய 40 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’சந்திரயான் 3
விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டதில்
இந்திய விஞ்ஞானிகளை
அண்ணாந்து பார்க்கிறது
அகிலம்

ஆகஸ்ட் 23
அது தடுமாறாமல்
தடம் மாறாமல்
நிலாத் தரையில்
இயங்க வேண்டும்

உலகத்தின் கண்கள்
குவிய வேண்டும்
நிலாவின் மீதும்
இந்தியா மீதும்

வெற்றி நிச்சயம்
வெண்ணிலா சத்தியம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்