சூப்பர் ஸ்டார் படத்திற்கு சென்சார் சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (18:56 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். இவர், டகரு, பீர்பால், வேதா ஆகிய  ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ஜெயிலர் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நடிகர் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், பிரசன்னா , மாஸ்தி வசனத்தில், அர்ஜூன் ஜன்யா வசனத்தில் உருவாகியுள்ள படம் கோஸ்ட்.  

இப்படம் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்