ஆதிபுரூஸ் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும்- திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்

செவ்வாய், 20 ஜூன் 2023 (16:39 IST)
இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் ஆதிபுரூஸ் படத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென்று   அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்  பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியுள்ளனர்.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக   சமீபத்தில் இப்படம்  வெளியான நிலையில்,  வெளியான 3 நாட்களில்  உலகம் முழுவதும் ரூ.349 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலீட்டியுள்ளது.

இந்த நிலையில்,  இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.  பல இடங்களில் தியேட்டர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்  பிரதமர் மோடிக்கு  இப்படம் பற்றி கடிதம் எழுதியுள்ளனர்.

அதில்,  ‘’ஆதிபுரூஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமாரை வீடியோ கேம் கதாப்பாத்திரம் போன்று சித்தரித்து இந்துக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளதாக’’ தெரிவித்துள்ளனர்.  மேலும்,’’ சனாதன தர்மத்தை அவமதிக்கும்  ஆதிபுரூஸ் படத்திற்கு தடை விதிக்க  வேண்டும்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்