''வலிமை'' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:54 IST)
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் இப்படத்தின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெறுங்க்கள் என எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வலிமை பட இந்திப் பதிப்பின் போஸ்டரை தயாரிப்பாளர் போனிகபூர் இன்று ரிலீஸ் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா வலிமை படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், நடிகர் அஜித்குமார், கார்த்திகேயா உள்ளிட்ட வலிமை படக் குழுவினருக்கு என் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Wishing #AjithKumar garu, my Brother @ActorKartikeya and the entire team all the very best! @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa #NiravShah #Valimai in Telugu, Tamil and Hindi. #ValimaiFromJan13 pic.twitter.com/6YHfx5Ycjh

— Vijay Deverakonda (@TheDeverakonda) January 4, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்