கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:46 IST)
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் தனுஷ். இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமான காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார் தனுஷ், அவருடன் இணைந்து   நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டார்  சிவராஜ்குமாரின் காட்சிகளை படமாக்கி முடித்ததாக  படக்குழு சமீபத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் ஜூன் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்து, ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்