வாடிவாசல் படத்தில் இருந்து ஜி வி பிரகாஷ் நீக்கமா?... பின்னணி என்ன?

வெள்ளி, 23 ஜூன் 2023 (08:16 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இடையில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் டெஸ்ட் ஷூட்டும் செய்தார். ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அவர் விலக்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அதற்குக் காரணம் ஜி வி பிரகாஷ் சமீபத்தில் பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்ததுதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பு வெற்றிமாறனுக்கு நெருடலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதனால் அவரை படத்தில் இருந்து நீக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் ஜி வி பிரகாஷ் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்