விழாவை ரத்து செய்யுங்கள்...முதல்வரிடம் நடிகை வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (20:34 IST)
முன்னணி நடிகை பார்வதி   500 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டுமென முதல்வருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.

கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க உள்ளதால் தனது பழைய  அமைச்சரவையைக் கலைக்க வேண்டி தன்னுடைய முதல்வர் பதவியை சமீபத்தில்  ராஜினாமா பினராயி விஜயன்.

இந்நிலையில், வரும் மே 20 ஆம் தேதி பினராஜி விஜயன் கேரள முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடம் 21 அமைச்சர்கள் பதவி ஏற்க வுள்ளனர். மேலும், இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, சுமார் 500 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகிறது.

கொரொனா காலத்தில் முதல்வர் பினராஜி விஜயன் சிறப்பாகச் செயல்பட்டதாக பலரும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை மறுநாள் கேரளாவில் நடைபெறவுள்ள முதல்வர் பதவியேற்பு விழா இணைய வழியாக நடந்துவது என்பது மற்ற மாநில அரசுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நடிகை பார்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  , நாளை மறுநாள் கேரளாவில் நடைபெறவுள்ள முதல்வர் பதவியேற்பு விழாவில் 500  பேருக்கு மேல் கலந்துகொள்வது தவறான முன்னுதாரணம். கொரொனா காலத்தில் இந்த அரசு பல்வேறு சாதனை செய்துள்ளது. ஆனால்வரும் 20 ஆம் தேதி500 பேர் கலந்துகொள்ளும்  பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்