மகளின் காதலுக்கு சம்மதம் சொன்ன போனி கபூர் – மணமகன் யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (10:19 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் குடும்ப நிகழ்வு ஒன்றில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஷிகரை ஜான்வி அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அப்போது ஜான்வியின் காதலுக்கு போனி கபூர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்