கொரோனாவின் பிடியில் பாலிவுட் வட்டாரம்! – தனிமைப்படுத்தப்படும் வீடுகள்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (13:46 IST)
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில பிரபலங்கள் வீட்டிலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சாமான்யர்கள், பிரபலங்கள் என பாராது எல்லார் மீதும் பரவி வருகிறது கொரோனா. இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராயிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் பழைய படங்களில் இணைந்து நடித்த முன்னாள் நடிகை ரேகா வீட்டின் பாதுகாவலருக்குக்கு கொரோனா உறுதியானதால் அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு பழம்பெரும் பாலிவுட் நடிகரான அனுபம் கெரின் அம்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவரது வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்