பதான் படம் இரண்டு நாட்களில் ரூ.220 கோடி வசூல்

வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:31 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், ஜான் ஆபிரகாம்,  தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். யஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை  வெளியிட்டுள்ளது.

நேற்று முன் தினம் இந்த படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் படம் பெற்று, வசூலை வாரிக் குவித்துள்ளது.

கடந்தாண்டு வெளியான பாலிவுட் படங்கள் வெற்றிபெறாத  நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஷாருக்கானின் பதான் படம் ஒட்டுமொத்த பாலிவுட்டிற்கும்  நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்துள்ள இப்படம்  இந்தியாவில்  முதல் நாளன்று ரூ.57 கோடியும் இரண்டாவது நாளில் ரூ. 70 கோடியும் மூன்றாவது நாளில் ரூ. 130 கோடியும் வசூலித்துள்ளது.

2 நாட்களில் பதான் படம்  உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

#Pathaan: RECORDS

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்