பாய்காட் சப்பாக்… பல ஸ்க்ரின்ஷாட்… ஒரே டிக்கெட் – வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (07:41 IST)
ஜே என் யு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள சப்பாக் திரைப்படத்தினை யாரும் பார்க்கக்கூடாது என பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் குரல் எழுப்பியுள்ளனர்.

ஜே என் யு வில் விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த போராட்டத்துக்கு வலதுசாரி அமைப்பு ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மாணவர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு ஆதரவளித்தார்.

இதனால் பாஜகவினர் மற்றும் வலதுசாரி சிந்தனைக் கொண்டவர்கள் தீபிகாவுக்கு எதிரான பரப்புரைகளை செய்துவருகின்றனர். இதன் ஒரு கட்டமாக சமூகவலைதளங்களில் தீபிகா நடிப்பில் உருவாகியுள்ள சப்பாக் திரைப்படத்தை புறக்கணிக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

இதையடுத்துப் பலரும் தாங்கள் முன் பதிவு செய்திருந்த டிக்கெட்களை கேன்சல் செய்துள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளனர். ஆனால் பகிரப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள் அனைத்தும் ஒரே டிக்கெட் என்பதுதான் இதன் உச்சப்ட்ச காமெடி. இதையடுத்து நெட்டிசன்கள் இந்த ஸ்கிரீன்ஷாட்களுக்கு எதிரான தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்