திருமணத்திற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கணவன் மனைவியாக சேர்ந்து வரும் அந்த அழகை பார்க்க ரசிகர்கள் கூடுவதும், அன்றைய தலைப்புச்செய்திகளில் இடம்பெறுவதுமாக இருக்கிறார்கள் தீப் -ரன். இதற்கிடையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, பாராட்டுவது, கொஞ்சுவதுமாக இருந்து வருகின்றனர். இதனை அவரது ரசிகர்கள் மிகவும் கியூட்டாக இருக்கிறது என கூறி ரசித்து வருகின்றனர்.
அந்தவகையில் ரன்வீர்சிங் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்த தீபிகா ரன்வீர் க்யூட் அண்ட் ஹாட்டாக இருக்கிறீர் என ஒரு ரசிகையை போன்றே கமெண்ட் போட்டார். உடனே ரன்வீர் ஹேப்பி ஆகி வாவ்..நன்றி பேபி, என் மனைவியிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு, நான் நிஜமகாவே இன்று ஹாட்டாக இருக்கிறேன் போல என தெரிவித்தார். இது அவர்களுடது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.