அமேசான் பிரைமில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் எது தெரியுமா ?

Webdunia
புதன், 1 ஜனவரி 2020 (09:20 IST)
அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்தா 2019 ஆம் ஆண்டு அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ்ப்படமாக பிகில் திரைப்படம் அமைந்துள்ளது.

பொதுமக்கள் இப்போது திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதில் அவ்வளவாக நாட்டம் காட்டுவதில்லை. அதனால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அமேசான் ப்ரைம் தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட படம் எது என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் பிகில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் அசுரன், விஸ்வாசம் ஆகிய படங்கள் உள்ளன.

ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியான பிகில் திரைப்படம் இந்த சாதனையைப் படைத்தது அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்