தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளியின் ஸ்பெஷலாக வெளிவந்த பிகில் படம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வெளிவந்த 5 நாளில் 200கோடி வசூலை குவித்து அபார சாதனை படைத்துள்ளது.
எதிர்பார்த்தை போலவே தொடர் விடுமுறை நாட்களில் வெளியான பிகில் திரைப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 125 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டதாம். படத்திற்கு கொஞ்சம் நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி வெறும் 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் ஈட்டி பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #BigilHits200CRs என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.