’தளபதி 64’ படத்தை அடுத்து மீண்டும் வில்லனாகும் விஜய்சேதுபதி!

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (21:30 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’விஜய் 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. விஜய்சேதுபதியின் டைரக்டர் விஜய்யின் கேரக்டருக்கு இணையாக இருப்பதாகவும் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது 
 
இந்த நிலையில் ’விஜய் 64’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த உள்ள 20 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை சுகுமார் என்பவர் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்