முதல் முறையாக அன்னையர் தினத்தில் என் மகள் அம்மான்னு... கணேஷ் வெங்கட்ராமன் நெகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (12:44 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .

தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் மகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வரும் நிஷா - கணேஷ் தம்பதியினர் அவ்வப்போது மகளின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் கணேஷ் தனது இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் " எதிர்ப்பாராத சில நிகழ்வுகள் ரொம்ப அழகானவை... அன்னையர் தினமான இன்று எங்கள் மகள் சமைரா முதல் முறையாக அம்மா என்று அழைத்திருக்கிறாள்' என மிகுந்த மகிழ்ச்சியுடன்  தாய்மையின் அழகை அனுபவித்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்