அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth

சனி, 7 ஜூன் 2025 (12:30 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆறு முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதை படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவர் படத்துக்கான ப்ரமோஷனில் நடிக்கும் சிலக் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்