‘பிக் பாஸ் 2’ ‘சபாஷ் நாயுடு’?

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (16:15 IST)
‘பிக் பாஸ் 2’ முடிந்ததும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படம் தொடங்கலாம் என்கிறார்கள்.
 
கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்ற 10 கேரக்டர்களில் ஒன்று இது. அந்த கேரக்டரின் நீட்சியாகத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதாவது, தன் மகளைக் காப்பாற்றுவதற்காக உளவுத்துறை அதிகாரியான கமல்ஹாசன் அமெரிக்கா செல்வதுதான் இந்தப் படத்தின் கதை.
 
அமெரிக்காவில் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், இதுவரை ஒரு ஷெட்யூல் மட்டுமே முடிந்துள்ளது. அதன்பிறகு கமல்ஹாசனுக்கு காலில் அடிபட, அதன்பிறகு ‘பிக் பாஸ்’, அரசியல், மக்கள் நீதி மய்யம் கட்சி என்று பிஸியாகிவிட்டார்.
 
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் கமல், அது முடிந்ததும் ‘சபாஷ் நாயுடு’ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். இந்தப் படத்தில் கமலின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

கமலின் ‘விஸ்வரூபம் 2’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ‘சபாஷ் நாயுடு’, ‘இந்தியன் 2’ என அரசியலுக்கு நடுவே படங்களிலும் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்