பிக்பாஸ் சீசன் 4 விரைவில் துவங்கும் விஜய் டிவி!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (13:32 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான எந்த ஒரு திட்டமும் சம்மந்தப்பட்ட நிறுவனம் எடுக்காததால் பிக்பாஸ் 4 சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்றெல்லாம் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள நெருங்கிய வட்டாரம், இப்பொழுது தான் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர். எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கும் என கூறுகின்றனர். மேலும். தமிழில் பிக்பாஸ் என்றாலே எப்பவும் கமல் மட்டும் தான் தொகுத்து வழங்குவார் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்