இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திரஜாவிடம் " பிக்பாஸ் 4 சீசனுக்கு நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு " சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளால் நான் போவேன். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு செல்ல நான் மேஜர் இல்லையே என்று கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேஜர் மட்டும் தான் அனுமதிப்பார்களா என்ன? என ஆளாளுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.