அஜித்தை நேரில் சந்தித்த பிக்பாஸ் சாக்ஷி - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (12:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் சாக்ஷி , வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களை பற்றி புறம் பேசி வந்தததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு  முன்னர் வெளியேற்றப்பட்டார். 


 
பிக்பாஸில் இருந்து வெளியேறியது முதல் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீடிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி போட்டோஷூட் , நேர்காணல், பிரபலங்களை சந்திப்பது என அத்தனை விஷயங்ககளையும் தனது சமூகவலைத்தளங்ககளில் பதிவிட்டு வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது, நடிகர் அஜித்தை  நேரில் சந்தித்துள்ளார் சாக்ஷி. அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். அந்த பதிவில், "என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகத் துணிச்சலான மனிதர்! ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன், அவரது தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் , எந்தவொரு பெண்ணுக்கும் மிகவும் பணிவானவர் மரியாதைக்குரியவர். யூ ராக் தல! என்று கூறி பதிவிட்டிருக்கிறார். 


 
இது அஜித் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வந்தாலும். நெட்டிசன்ஸ் சாக்ஷியை பங்கமாக இஷ்டத்துக்கு கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்